Begin typing your search above and press return to search.
திருவாடானை அருகே பால் வேன் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயம்
திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் கருவேல மரத்தில் மோதி விபத்து.
HIGHLIGHTS

திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் கருவேல மரத்தில் மோதி விபத்து.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி நோக்கி சென்ற பாக்கெட் பால் ஏற்றி வந்த வேன் அச்சங்குடி விளக்கு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கருவேல மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பால் வேனை ஓட்டிவந்த பிரபாகரன் (29) படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபாகரனை மீட்டு திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். நல்வாய்ப்பாக எதிரே வாகனம் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.