முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு

முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முள்ளிமுனை கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு
X

முள்ளிமுனை கிராமத்தில்,  தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு மாவட ஆட்சியர் தலைமயில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு, மாவட்ட ஆட்சியர் (பொ) காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் முன்னிலை வகித்தார். தேசிய பேரிடர் மீட்பு குழு நிர்வாகிகள், சுகாதார துறை அலுவலர்கள் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
முதலில் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 மற்றும் தீ அணைப்பு மீட்பு வாகனத்தில் ஏற்றி வந்து பேரிடர் மீட்பு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பது போல ஒத்திகை நடந்தது. இதில் தீயணைப்பு திருவாடானை நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, பேரிடர் மீட்பு கட்டிடத்தில் பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் செய்யவேண்டியவற்றை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் கடற்கரையோரம், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 9:30 AM GMT

Related News