தாசில்தார் மீது தாக்குதல்: பதிலுக்கு தவறுதலாக போலீசை தாக்கிய வருவாய்த்துறை ஊழியர்கள்

திருவாடானை தாசில்தாரை தாக்கிய 3 பேர் கைது. தவறுதலாக போலீசை தாக்கிய வருவாய்த்துறை ஊழியர்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாசில்தார் மீது தாக்குதல்: பதிலுக்கு தவறுதலாக போலீசை தாக்கிய வருவாய்த்துறை ஊழியர்கள்
X

கொடிபங்கு கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ், சந்தோஷ்குமார், பாண்டி ஆகிய மூவரும் ஒரே வாகனத்தில் மங்களக்குடியில் இருந்து தேவகோட்டை சென்றனர். வழியில் குருந்தங்குடி பஸ் ஸ்டாப் அருகே அவர்களை மறித்து சோதனையிட்டனர்.

அவர்களிடமிருந்து ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் இருந்துள்ளது. டைல்ஸ் வாங்குவதாக கூறினாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை திருவாடனை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். நீங்கள் பணத்தை தாலுகா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர்.

அதனால் நேற்று மாலை பாண்டி, சந்தோஷ் குமார், ராகேஷ் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் தாசில்தார் செந்தில் வேல்முருகனை சந்தித்து பணத்தை கேட்டபோது மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வேண்டும் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த பாண்டி ஏன் எங்களை அழைக்கிறீர்கள் என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளாதாகவும், பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கூட்டிச் சென்று தாசில்தார் உத்தரவின் பேரில் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தி கேட்டு தாலுகா அலுவலக ஊழியர்கள் கோபமடைந்து திருவாடனை காவல் நிலையத்துக்குச் செல்லும் வழியில் சீருடை அணியாமல் இருந்த காவலர்களை இவர்தான் என தவறாக எண்ணி தாக்கினார்கள். அங்கிருந்தவர்கள் இவர்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை அவர்கள் போலீஸ் என்றும் கூறியும் கேட்காமல் தாக்கியுள்ளனர். பின்னர் பதிலுக்கு போலிசும் விலக்கி விட்டுளள்ளனர். போலிசை தாக்கிய அலுவலர்களை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று விட்டனர். அதன் பின் அதிகாரிகள் காவல் நிலையத்தில் தெரியாமல் செய்து விட்டோம் என்று கூறி அலுவலர்களை கூட்டிச் சென்று விட்டனர். எது எப்படியோ அரசு அதிகாரிகள் காவல்நிலையம் முன்பே இப்படி நடந்து கொண்டுள்ள விஷயம் பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 March 2021 6:48 AM GMT

Related News