/* */

ஆட்சியர் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

ஆட்சியர் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
X

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பாக,  மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளம்பெண்.

இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர், இராமநாதபுரம் மாவட்டம் சித்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த நாகபாண்டியை, 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து சூரங்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த கட்ட பஞ்சாயத்தில் தனது 6 வயது ஆண் குழந்தையை, தாயிடம் இருந்து பிரித்து தந்தையிடம் கொடுத்துள்ளனர். தனது மகனுக்கு கிட்னி நோய் இருப்பதால் அவனை சரிவர கவனிக்க மாட்டார்கள். எனவே, தன்னிடமே குழந்தையை ஒப்படைக்க கோரி பல முறை காவல் நிலையத்தில், முனீஸ்வரி புகார் செய்துள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார் வரும் போது மண்ணெண்ணெய் ஊற்றி, முனீஸ்வரி தீ குளிக்க முயன்றுள்ளார். மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனர் பாய்ந்து சென்று, இளம்பெண்ணை காப்பாற்றினார். பிரிந்து வாழும் கணவனிடம் இருந்து கட்டப்பஞ்சாயத்து மூலம் பறிக்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் முன்னே இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 20 Sep 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  2. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  3. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  6. சினிமா
    ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  9. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  10. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...