/* */

முழு ஊரடங்கால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது

காணும் பொங்கலான இன்று 2வது முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது
X

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய பஸ் நிலையம்.

உலகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது இடங்கள், சுற்றுலாத் தலங்கள், உறவினர்களின் இல்லங்கள் உள்ளிட்டவைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். இந்நிலையில் காணும் பொங்கலான இன்று தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த ஆண்டின் இரண்டாம் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க,மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த 9ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு, அத்தியாவசிய பணிகளான பால், தினசரி பத்திரிகை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, அமரர் ஊர்தி, மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாய விளை பொருட்கள் எடுத்துச் செல்ல எந்தவித தடை இல்லை. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காணும் பொங்கல் அன்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெறும் நாளான இன்று முழு ஊரடங்கு அறிவித்திருப்பது பொதுமக்களிடையே வருத்தத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில், கொரோனா பரவல் மேலும் பல மடங்கு அதிகரிக்குமென்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதனால், முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம், தொழில் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்துத் தரப்பிலும் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

ஆனால், பொங்கலை ஒட்டிய நாட்களில், கடை வீதிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூடிய கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.காணும் பொங்கலுக்கு பூங்கா,சுற்றுலாத்தலம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரள்வார்கள். மேலும், பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற நிகழ்ச்சிகள், தென் மாவட்டங்களில் அதிகளவில் நடக்கும் இவற்றை அனுமதித்தால், கொரோனா பரவல் மிகவும் அதிகமாகும்.

எனவே, இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அடுத்த சில நாட்களில், கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கும் வாய்ப்பும் அதிகமுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், பொதுவாகவே காணும் பொங்கலன்று கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவது வழக்கம் சமைத்த உணவை எடுத்து சென்று அங்கு உண்டு நேரத்தையும் பொழுதைக் கழிப்பார்கள் ஆனால் இன்று முழு ஊரடங்கு அறிவித்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் மருந்தகங்கள் பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்திருக்கிறது உணவகங்களில் 7 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து மீது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 8:14 AM GMT

Related News