தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து
X

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் தீவுப்பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர். மேலும் இலங்கையில் நடைபெற்ற வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளிகள் மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சுமார் 50 பேர் சிறையில் இருந்து தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கரவாதிகள் அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற் பகுதிகளிலும், அதே போல் தீவு பகுதி முழுவதும் தமிழக கடலோர பாதுகாப்பு படையின் இராமநாதபுரம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தமிழக கடலோர பாதுகாப்பு படை காவலர்கள் ரோந்து படகுகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியோருக்கு சொந்தமான ரோந்து படகுகள், ஆள் இல்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடல் பரப்பு, மணல் திட்டுகளில் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் உள்ள முயல் தீவு, குருசடைத் தீவு போன்ற தீவுப் பகுதிகளில் தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 May 2022 3:55 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 2. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 3. சோழவந்தான்
  சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 4. திருவண்ணாமலை
  5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 5. வந்தவாசி
  மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து: வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்...
 6. கீழ்பெண்ணாத்தூர்‎
  கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்
 7. சென்னை
  'வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்' -பல்கலை., விழாவில்...
 8. இந்தியா
  என்னது இது பாம்பா..? அதிசய உயிரினம்..!
 9. உலகம்
  மூணே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா! திணறும் வடகொரியா
 10. சென்னை
  'கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்கள்' -அமைச்சர் பொன்முடி...