/* */

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கிய ராமேஸ்வரம் மீனவரின் படகு

இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவரின் படகு நடுக்கடலில் மூழ்கியதால் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கிய ராமேஸ்வரம் மீனவரின் படகு
X

பைல் படம்.

தமிழக முதல்வரை சந்திக்க மீனவ சங்க கூட்டமைப்பினர் இன்று சென்னையில் முகாமிட்டுள்ளனர். நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் இரவு கச்சத்தீவுக்கும் தனூஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கரை திரும்பும் போது கச்சத்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்தது.

பின்னர் மீனவர்களை கைது செய்யும் நோக்கில் அச்சுறுத்திய போது, உயிருக்குப் பயந்தும் படகு பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தால் தப்பியோடிய படகுகள் மீது ரோந்து கப்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டியடித்தனர்.

அப்போது வஸ்தியான் என்பவரின் படகு மீது பயங்கரமாக மோதியது. இதில் படகு நடுக்கடலில் படகு மூழ்கியது. படகிலிருந்த சுரேந்திரன், ஜெயபால், ஆகாஸ் டேனியல், ராஜா, ஜெபஸ்தீயான் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படகிலிருந்த சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்தும், வரும் 21ஆம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் உடனடியாக மீனவ அமைப்புக்களை சந்திக்க விரும்புவதாக கூறியதை அடுத்து மீனவர் சங்க பொறுப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

Updated On: 20 Jan 2022 2:54 PM GMT

Related News