/* */

பாக்ஜலசந்தி கடல் உள்வாங்கியது: மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியது.

HIGHLIGHTS

பாக்ஜலசந்தி கடல் உள்வாங்கியது: மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம்
X

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக, கடல் உள்வாங்கியது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக, கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுபடகுகள் மற்றும் பைபர் படகுகள் தரைதட்டின. இதனால் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.

இந்நிலையில் தனுஸ்கோடி, கீழக்கரை, பெரியப்பட்டிணம், உள்ளிட்ட மன்னார் வளைகுடா தெற்கு கடல் பகுதிகளில் கடந்த சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக தனுஸ்கோடி அருகே உள்ள முகுந்துராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் வழக்கதிற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வீசும் சூறைக்காற்று காரணமாக சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On: 18 May 2022 6:25 AM GMT

Related News