/* */

மீன் வளத்துறையை கண்டித்து மீனவர்கள் நூதனப் போராட்டம்

இராமேஸ்வரம் மீன் வளத்துறையை கண்டித்து நாட்டுப்படகு மற்றம் சிறு தொழில் மீனவர்கள் கழுதைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டம்.

HIGHLIGHTS

மீன் வளத்துறையை கண்டித்து மீனவர்கள் நூதனப்  போராட்டம்
X

மீன் வளத்துறையை கண்டித்து  கழுதைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இராமேஸ்வரம் நாட்டுப்படகு மற்றம் சிறு தொழில் மீனவர்கள் 

இராமேஸ்வரம் மீன் வளத்துறையை கண்டித்து நாட்டுப்படகு மற்றம் சிறு தொழில் மீனவர்கள் கழுதைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தாத மீன்வளத் துறையினரை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் கிராமங்களில் வசிக்கும் லட்சகணக்கான நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தீவுப் பகுதி மற்றம் கரையோர மீன் பிடிப்பை நம்பி தொழில் செய்து வருகின்றனர். சிறு தொழில் மீனவர்கள் கடல் வளத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீன்பிடித்து வருவதாகவும், ஆனால் விசைப்படகு மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி கரையோர பகுதியில் மீன்பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக, நாட்டு படகு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மூலம் விசைப்படகுகள் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு அப்பால்; மீன் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஏராளமான விசைப்படகுகள் கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால்; நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.எனவே கரையோர மீன் பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட் மீன்வளத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் மீன் வளத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை நாட்டு படகு மீனவர்கள் என குற்றம் சாட்டியுள்ளனர். .

நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையினரை கண்டித்து இராமேஸ்வரம் தீவு அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் சுமார் 50க்கும் அதிகமானோர் கழுதைக்கு பூமாலை அணிவித்து கழுதை கழுத்தில் மீன் வளத்துறை என எழுதி இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் முன் கழுதைக்கு மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காதில் பூ சுற்றி கொண்டு மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 9 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!