/* */

நாளை முதல் ஒரு வாரம் வேலைநிறுத்தம்: இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என, அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாளை முதல் ஒரு வாரம் வேலைநிறுத்தம்: இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு
X

இராமேஸ்வரத்தில், அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று, மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். வருடந்தோறும் மீன்வளத்துறை சார்பில் படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

கடந்த ஒரு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக, படகுகளை ஆய்வு செய்யப்படாமல் இருந்து வரும் நிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு, 3 விசைப்படகுகள் அரசு அனுமதி இல்லாமல் வந்து உள்ளதால் அதனை அப்புறப்படுத்த மீனவ சங்கங்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் மற்ற துறைமுகங்களில் ஆய்வு நடத்தும் போது இராமேஸ்வரம் துறைமுகத்திலும் விசைப்படகுகளை ஆய்வு நடத்த வேண்டும் எனவும், புதிதாக இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு வந்திருக்கும் 3 விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியும், நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, இராமேஸ்வரம் அனைத்து மீனவர் விசைப்படகு சங்கம் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்