/* */

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா

இராமநாதபுரத்தில், நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, ஒப்பந்தக்காரர்,வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா
X

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கோரி, இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீன் வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரத்தில் நகராட்சி நிர்வாகத்தால், புதிய பேருந்து நிலையம் அருகே, நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு, கடந்த 14.07.2021 அன்று சார்பில் திறக்கப்பட்டது. தெருக்களிலும், அனுமதியற்ற மீன் அங்காடிகளிலும் மீன் விற்பனை செய்யக்கூடாது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன் மார்க்கெட்டில் மட்டும்தான் மீன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் நகராட்சி அறிவிக்கப்பட்டது.

ஆனால், தனியார் மீன் அங்காடிகளின் கட்டுப்பாடுகளால் மீன் வியாபாரிகள் அங்கு செல்ல தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மீன் மார்க்கெட் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்திலேயே செயலிழந்தது. இந்நிலையில் வருடத்திற்கு ரூ 46 லட்சத்திற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரும், அங்கு மீன் விற்பனை செய்வதற்காக சென்ற சில மீன் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, புதிய நவீன மீன் அங்காடியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், இதனை செய்யத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர் சசிகுமார் மற்றும் மீன் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர், இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை, இன்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  2. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  3. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  4. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  5. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  6. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  8. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  9. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!