தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு விற்பனை கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
X

இராமநாதபுரம் மாவட்டம், தீபாவளிபண்டிகைக்கு தற்காலிக பட்டாசு விற்பனை கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா.

04.11.2021 அன்று தீபாவளிபண்டிகை கொண்டாடப்படஉள்ளது. பண்டிகையின் போது இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க உரிமம் பெறவிரும்புவோர் கீழ்க்காணும் விதிகளைக் கடைபிடித்து வரும் 30.09.2021 தேதிக்குள் இணைய வழியில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ல் உள்ளவிதி 84-யை முறையாகக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான இடத்தினைத் தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது படிவம் யுநு-5ல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள்-5,கடையின் வரைபடம், மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படங்கள்-2, மனுதாரர் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி ரசீது செலுத்திய நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டுவரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைதாளில் பெறப்பட்டஅசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரியகணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் சலான் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 30.09.2021 மாலை 5.45 மணிக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 15.10.2021 தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் என்ற தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.Updated On: 24 Sep 2021 8:38 AM GMT

Related News