/* */

மன அழுத்தத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள் குறைய வலியுறுத்தி வடமாநில இளைஞர் விழிப்புணர்வு பயணம்

சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் செய்து 404 -ஆவது நாளில் இராமேஸ்வரம் வந்தடைந்த வட மாநில இளைஞர்

HIGHLIGHTS

மன அழுத்தத்தால் அதிகரிக்கும்  தற்கொலைகள் குறைய வலியுறுத்தி  வடமாநில இளைஞர் விழிப்புணர்வு  பயணம்
X

மன அழுத்தால் எற்படும் தற்கொலைகள் குறைய வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் செய்து 404 -ஆவது நாளில் இராமேஸ்வரம் வந்தடைந்தார் வட மாநில இளைஞர்.

மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த, நாடு முழுவதும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த விஷால் டிக்கார் என்ற இளைஞர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 2020ஆம் வருடம் ஜூன் மாதம் 13ம் தேதி தனது சொந்த கிராமான நாக்பூரிலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதால்; மன அழுத்தத்தினால் தற்கொலைகள் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என வலியுறுத்தும் விதமாக கடந்த ஆண்டு துவங்கிய இந்த சைக்கிள் பயணம், இன்று 404 வது நாளாக ராமேஸ்வரம் வந்தடைந்தார்.

இவர், மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு கோவா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சென்று பின் தமிழகத்திற்குள் வந்து; இன்று இராமேஸ்வரம் வந்தடைந்தார். இதன் பின்னர், இங்கிருந்து ,மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி வழியாக ஆந்திரா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இவர் சராசரி ஒரு நாளைக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார்.

செல்லும் வழிகளில் தன்னால் இயன்ற அளவு, மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்களிடம் மன அழுத்தத்தினால் ஏற்படும் தற்கொலைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த சைக்கிள் பயணம் மூலமாக தற்கொலைகள் குறையும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருவதாக விஷால் டிக்கார் தெரிவித்தார். மேலும் இவர், இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பாம்பன் பாலம், உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ஓட்டி சென்றார். சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 22 July 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்