/* */

இராமநாதபுரத்தில் எரியும் பிணங்களோடு படுத்துறங்கும் வீர மங்கையின் வாழ்க்கை போராட்டம்.

உன்னத பணி மேற்கொள்ளும் ஜோதிக்கு உரிய ஊதியம், அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வாழ்க்கையில் ஜோதி ஏற்றி வைக்குமா தமிழக அரசு?.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் எரியும் பிணங்களோடு படுத்துறங்கும் வீர மங்கையின் வாழ்க்கை போராட்டம்.
X

இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதி.

இராமநாதபுரத்தில் எரியும் பிணங்களோடு படுத்துறங்கும் வீர மங்கையின் வாழ்க்கை போராட்டம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் ஒருவர் உயிரிழந்தால் அவர் ஆன்மாவாக நடமாடுவார் என்ற அச்சத்தில் அந்த கிராமத்தில் இரவு நேரங்களில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்படும். அப்படி ஆண், பெண் பாகுபாடு இன்றி இரவு நேரங்களில் பேய் பயம் கொன்றிருக்கும் போது தனியொரு பெண்ணாக நாளொன்றுக்கு 10 பிணங்களை எரியூட்டுவதோடு, நேரமாகும் பட்சத்தில் ஷட்டரை சாத்திக்கொண்டு எரியும் பிணங்களோடு படுத்துறங்கும் வீர மங்கையின் வாழ்க்கை போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இராமநாதபுரம் நகராட்சியின் பராமரிப்பில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் மின்சார தகன கூடாரம் (சுடுகாடு) கடந்த 2006ம் ஆண்டு செயல்பட தொடங்கியது.

இது துவங்கியதிலிருந்தே ஜோதியின் கணவர் எரியூட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அவர் இறந்துவிடவே செய்வதறியாது திகைத்த ஜோதி, தன் குடும்பத்தின் வறுமை காரணமாக தன்னுடைய கணவர் பார்த்த தொழிலையே தான் பார்ப்பதாக அறக்கட்டளையினரிடம் கூறவே திகைத்து போன அறக்கட்டளையினர், பின்னர் அந்த வேலையை பார்க்க வேறு யாரும் முன்வராததால் ஜோதியையே பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர்.

கடந்த 2015 துவங்கி தற்பொழுது வரை அந்த வேலையை ஆத்ம திருப்தியோடு செய்துவருகிறார் ஜோதி. இவர் கூறும் தகவல்கள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. நாளொன்றுக்கு சாதாரணமாக 2 முதல் 4 உடல்களை தகனம் செய்து வந்ததாகவும், இடையில் சில மாதங்கள் மின் தகன மேடையில் ஏற்பட்ட பழுது காரணமாக வெளியில் விறகு வைத்து உடல்களை எரித்ததாகவும் கூறுகிறார்.

தற்பொழுது கடந்த ஓராண்டாக கொரோனா காலகட்டத்தில் நாளொன்றுக்கு 5 முதல் 10 உடல்கள் வரை தகனம் செய்திருப்பதாகவும், சில நேரங்களில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மூட்டை கட்டி கொண்டுவருவர், அந்த உடலையும் அப்படியே எரிப்பதோடு, சில அநாதை உடல்களும் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து சடங்குகளையும் தானே செய்து தகனம் செய்வதாக கூறுகிறார் மனநிறைவான புன்னகையோடு.

இதில் கிடைக்கும் வருமானம் போதிய அளவில் உள்ளதா என்ற கேள்விக்கு, அதனை நான் எப்படி சொல்ல முடியும் வருமானத்திற்கு பார்க்க போனால் யாரேனும் சாவர்களா என்று காத்திருப்பது போல ஆகிவிடுமே. அதுமட்டுமல்ல இதனை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல நினைத்தால் கூட எந்த வேலைக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். பிறகென்ன செய்வது அதிலும் குறிப்பாக அதிக உடல்கள் வரும் நேரங்களில் அவற்றை முடிக்க நள்ளிரவு நேரமாகிவிடும். எனவே எரியூட்டும் தகன மேடையின் இரு பக்க ஷட்டர்களையும் மூடிக்கொண்டு எரியும் பிணத்திற்கு அருகேயே தூங்கி விடுவேன் என்று எதார்த்தமாக கூறுகிறார்.

மேலும் கொரோனா காலத்திலும் கூட எந்த தயக்கமும் இல்லாமல் தொடர்ந்து பணிபுரியும் தனக்கு கொரோனா தடுப்பூசி அரசு சார்பில் போட்டால் என்ன நானும் மனித ஜென்மம் தானே என்று வெகுளியாக கேட்கிறார். உன்னத பணி மேற்கொள்ளும் ஜோதிக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அவரின் வாழ்க்கையில் ஜோதி ஏற்றி வைக்குமா தமிழக அரசு?.

Updated On: 8 Jun 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!