/* */

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
X

ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர்.

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம். வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம். இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதாக வரும் வெள்ளிக்கிழமை சென்னை செல்லும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூன்று விசைப்படகுகளையும் அதில் இருந்து 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கை மயிலட்டி மீன் பிடி துறைமுகம் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து இன்று ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சென்னை செல்லும் சேது விரைவு ரயிலை மறியத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Updated On: 8 Feb 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு