/* */

ராமேஸ்வரம் நகராட்சியில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு

இராமேஸ்வரம் நகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் என 4 பேர் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

ராமேஸ்வரம் நகராட்சியில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு
X

இராமேஸ்வரம் நகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் என 4 பேர் திமுகவில் இணைந்தனர்.

இராமேஸ்வரம் நகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் என 4 பேர் திமுகவில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளது. இவைகளில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இராமேஸ்வரம் அதிமுக முன்னாள் நகராட்சி தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அர்ஜுனன் தலைமையில், நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்ற முகேஷ் குமார், முருகன், சங்கர் உள்ளிட்ட 4 கவுன்சிலர்கள் இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் ராமநாதபுரத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதுபற்றி எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளரும் ராமேஸ்வரம் முன்னாள் நகராட்சி தலைவருமான அர்ஜுனன் அவர்கள் கூறுகையில்: 1980 முதல் சுமார் 40 ஆண்டு காலமாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது அதிமுகவின் கொள்கை கோட்பாடுகள் நிலையில்லாத தன்மையால் அதிலிருந்து விலகி பொது மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி நடத்திவரும் தமிழக முதல்வரின் செயல்பாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர்களின் செயல்பாடுகளைக் கண்டு பெருமிதம் அடைந்து அவர்களின் கீழ் பணியாற்ற விரும்பி திமுகவில் இணைந்துள்ளோம்.

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினரை திமுகவில் விரைவில் இணைக்க உள்ளேன். திமுகவின் பல்வேறு விதமான சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி கட்சி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

Updated On: 24 Feb 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?