13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர் கட்சி அனுசரிப்பு

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர் கட்சி அனுசரிப்பு
X

தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு. தெர்மாகோல் மூலம் படகு செய்து கடலில் விட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் ஏராளமானோர் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவ புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்ஜைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன்:- ஐநா மன்றத்தில் இந்திய அரசு தலையிட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்,மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும், தமிழக முதல்வர் தமிழினத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராக அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யாரெல்லாம் கலந்து கொள்ளமாட்டார் என்று நினைத்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் ஒரு துக்க நாளாக அறிவித்து அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 18 May 2022 6:27 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை