/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 956 பேர் +2 தேர்வு எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 956 பேர் +2 தேர்வு எழுதுகின்றனர்
X

இராமநாதபுரத்தில் தொடங்கிய பிளஸ்2 தேர்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் 61 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை 158 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,118 மாணவர்கள், 7,838 மாணவிகள் என 14 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 22 பெண்கள், 8 ஆண்கள் என மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் 30 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறவில்லை. மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு மதிப்பெண்களின் படி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்பு படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு முதலிலும், இதனையடுத்து 6 முதல் 11 வகுப்புகளும் ஆரம்பிக்கப் பட்டன.கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும், இதன்பின் மழலையர் பள்ளிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 2021-2022 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் தேர்வை மாணவர்கள் சந்திக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. மாதாந்திர தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவினாலும் இந்தாண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்திருந்தார். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு மையங்களில். மின் தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் சிரமமின்றி தேர்வெழுத அனைத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்தார்.

Updated On: 5 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!