/* */

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி : துவக்கி வைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

பரமக்குடியில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி : துவக்கி வைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, பச்சரிசி வெல்லம், முந்திரி, திராட்சை, கோதுமை, ரவை,முழுநீள கரும்பு உள்ளிட்ட 20 ஒரு பொருள்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 355 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள 449 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 784 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

பரமக்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிசுப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், கோட்டாட்சியர் முருகன், மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், பரமக்குடி துணைப்பதிவாளர் சுல்தான், ராமநாதபுரம் எம்எல்ஏ முத்துராமலிங்கம்,பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ், தீர்மான குழு துணை தலைவர் திவாகரன், விவசாய அணி துணை செயலாளர் முருகவேல், பரமக்குடி நகர பொறுப்பாளர்கள் சேது கருணாநிதி, ஜீவரத்தினம், ஒன்றியச் செயலாளர்கள் போகலூர் கதிரவன், பரமக்குடி மேற்கு சந்திரசேகர், கிழக்கு ஜெயக்குமார், போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணைத்தலைவர் பூமிநாதன், வட்டாட்சியர் தமீம் ராஜா மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 5:00 PM GMT

Related News