/* */

கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி

பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை. கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம்.

HIGHLIGHTS

கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி
X

பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரமேஷுக்கும், இராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சரண்யாவிற்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரூபேஷ்(13 )என்ற மகனும், ஹர்சிதா(11 ) என்ற மகளும் உள்ளனர். திருமணத்தின் போது 90 சவரன் தங்க நகை வரதட்சணையாக சரண்யா குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். ரமேஷ் அவரது தந்தையுடன் சேர்ந்து பரமக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

தொழிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, சரண்யாவின் நகைகளை விற்று தொழில் நடத்தி வந்துள்ளார். மேலும் நலிவுற்ற நிலையில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் ரமேஷை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சரண்யாவிற்கும், ரமேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினசரி சண்டை நடந்துள்ளது.

கடன் தொல்லையால் சரண்யா டிசம்பர் மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிப்ரவரி மாதம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், மகன் ரூபேஷை கடன் பெற்றவர்களிடம் காலையில் ஒப்படைத்து விட்டு, பணம் செலுத்திய பின்பு மீண்டும் இரவு வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இவ்வாறு ரமேஷ் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சரண்யா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் . ரமேஷ் வீட்டிலிருந்து சரண்யாவை இன்று வெளியே விரட்டி விட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சரண்யா தனது மகனுடன் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். போலீசார் சரண்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.

இது குறித்து சரண்யா கூறுகையில்: எனது கணவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, எனக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்டு அனைத்து நகைகளையும் விற்றுவிட்டார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வதால், எனது மகனை தினசரி அடமானம் வைத்துள்ளார் என் கணவர். எனது மகனுக்கு காலை முதல் மாலை வரை உணவு கூட அளிக்காமல் கடன் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்கின்றனர்.

எனது கணவரும் மாமனாரும் என்னையும், குழந்தைகளையும் அசிங்கமாக பேசி தொந்தரவு செய்து இன்று வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர். கடனுக்காக எனது மகனை அடமானம் வைக்கும் கணவர் ரமேஷ் மீதும் கடன் கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கடனுக்காக பெற்ற மகனை தந்தையே தினசரி அடமானம் வைத்த சம்பவம் பரமக்குடியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 July 2021 4:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...