/* */

விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
X

சமத்துவபுரத்தில் உள்ள பயனாளியின் வீட்டில் பழுது பார்க்கும் பணிகளை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி , சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ராஜாளிப்பட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.8.21 இலட்சம் மதிப்பில் அம்மன் ஊரணி மேம்பாட்டுப் பணியினையும், விராலிமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ.28 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளிக் கட்டடத்தினை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, விராலிமலை மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுவரும் பணிகளையும், அன்னவாசல் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில், 92 வீடுகள் ரூ.62.640 இலட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதையும், இதில் மருதன் மனைவி சிட்டு என்ற பயனாளியின் வீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுள்ளதை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியதாவது: ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 5,500 வகுப்பறைகள் 4 மாதங்களில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்கு ரூ.823 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதலமைச்சரின் கிராமப்புற சாலைத் திட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் போன்ற திட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளையும், பொதுமக்களின் கிராமப்புற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்.

முதலமைச்சரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின்கீழ், 10,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ரூ.4,000 கோடி மதிப்பில் தரமிக்கதாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், முடிவுற்றப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து கிராம சாலைகளையும் தரமானதாக பணிகள் மேற்கொள்வதே அரசின் நோக்கம் ஆகும் எனவும், மாநிலத்தில் 66,000 தூய்மைப் பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிடும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் .காமு.மு.பி.மணி, ஒன்றிய குழு உறுப்பினர்.மு.பி.ம.சத்தியசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் எஸ்.செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, ஆனந்தன், சுவாமிநாதன், கலைச்செல்வி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

-----------------------------------------------------------------------------------------------------------------------

Updated On: 16 May 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  2. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்