/* */

விராலிமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஆட்சியர் வெளியிட்டார்

HIGHLIGHTS

விராலிமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு
X

விராலிமலையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை இலுப்பூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தடுப்பு தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தேராவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமினை இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பள்ளி கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 10 Oct 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்