/* */

கிராமத்தை நோக்கி ரோட்டரி சங்கம்: பரணிகுடிபட்டியில் கிராம கூட்டம்

கிராமத்தின் தேவையினை அறிந்து, முடிந்தவரையில் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரோட்டரியின் கிராமக் கூட்டம்.

HIGHLIGHTS

கிராமத்தை நோக்கி ரோட்டரி சங்கம்: பரணிகுடிபட்டியில் கிராம கூட்டம்
X
திருமயத்தை அடுத்த பரணி குடிப்பட்டியில் நடந்த கிராம கூட்டத்தில் கலந்துகொண்ட சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் ஊராட்சி, பரணிகுடிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் முதல் கிராமக் கூட்டம் நடைபெற்றது.

ரோட்டரி சங்கங்கள் கிராமத்தை நோக்கி சென்று அவர்களின் தேவையினை அறிந்து, முடிந்தவரையில் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஸ்டார் ஆண்டின் ரோட்டரி ஆளுநர் ஜெயக்கன் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் இணைந்து பரணிகுடிப்பட்டி என்கிற கிராமத்தில் முதல் கிராமக் கூட்டத்தினை மிக எளிமையாக நடத்தினார்கள்.

இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், ஓவியர் ரவி, பொருளாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் துணை ஆளுநர் சிவாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி ஆளுநரின் அறிவுறுத்தல்களைப் பற்றி விளக்கி பேசினார். கடந்த ஆண்டுகளில் கிராமத்திற்கு பல ரோட்டரி நலத்திட்டங்களை செய்து கொடுத்தற்காக ஊர்மக்கள் சார்பாக ரோட்டரி நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இக்கூட்டத்தில் ரோட்டரி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் அன்னை பார்த்திபன், வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Updated On: 17 Sep 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி