/* */

பொன்னமராவதி, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்

பொன்னமராவதி, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

பொன்னமராவதி, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்
X

பொன்னமராவதி, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், புதிய மின்மாற்றிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

பின்னர் சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளியோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் சீராக வழங்கும் வகையில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது. அதன்படி, இன்றையதினம் புதிய மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

வார்ப்பட்டு ஊராட்சி, நல்லூர் கிராமத்தில் குறைவான மின்அழுத்தத்தினை சரிசெய்யும் வகையில், ரூ.7,85,000 செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நல்லூர் கிராமத்தில் உள்ள 90 வீட்டு மின் இணைப்புகள், 2 கோவில் மின் இணைப்புகள், 4 விவசாய பம்பு செட்டுகள் மற்றும் 2 ழுர்வு மின் இணைப்புகளுக்கு நிறைவான மின் அழுத்தம் வழங்கப்படும்.

காரையூர் கிராமத்தில் குறைவான மின்அழுத்தத்தினை சரிசெய்யும் வகையில், ரூ.4,96,820 செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காரையூர் கிராமத்தில் உள்ள 50 வீட்டு மின் இணைப்புகள் மற்றும் 13 வணிக மின் இணைப்புகளுக்கு நிறைவான மின் அழுத்தம் வழங்கப்படும்.

கூடலூர் ஊராட்சி, சித்தூர் கிராமத்தில் குறைவான மின்அழுத்தத்தினை சரிசெய்யும் வகையில், ரூ.4,70,528 செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சித்தூர் கிராமத்தில் உள்ள 120 வீட்டு மின் இணைப்புகள், 1 கோவில் மின் இணைப்புகள், 9 விவசாய பம்பு செட்டுகள் மற்றும் 1 ழுர்வு மின் இணைப்புகளுக்கு நிறைவான மின் அழுத்தம் வழங்கப்படும்.

கீழப்பனையூர் ஊராட்சி, வெட்டுக்காடு கிராமத்தில் குறைவான மின்அழுத்தத்தினை சரிசெய்யும் வகையில், ரூ.5,08,700 செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மினிப்பெட்டி மற்றும் வெட்டுக்காடு கிராமங்களில் உள்ள 300 வீட்டு மின் இணைப்புகள், விவசாய பம்பு செட்டுகள் மற்றும் குடிநீர் மின் இணைப்புகளுக்கு நிறைவான மின் அழுத்தம் வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் மின்சாரத்தினை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, செயற்பொறியாளர் .எம்.ஆனந்தாய், .முத்து, இளையராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...