/* */

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னனூரில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னனூரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னனூரில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு
X

 திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில், பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (24.07.2022) திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னனூரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில், பகுதிநேர நியாயவிலைக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (24.07.2022) திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறந்து வைப்பதன் மூலம் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன், தரமான உணவுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 690 முழுநேர அங்காடிகளும், 317 பகுதிநேர அங்காடிகளும் என மொத்தம் 1,007 பொதுவிநியோகத் திட்ட அங்காடிகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 4.63 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில், 318வது பகுதிநேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும் விராச்சிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள மேலப்பனையூர்-1 அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள, பொன்னனூர் பகுதி நேர நியாயவிலைக் கடையானது 185 குடும்ப அட்டைகளுடன் பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இயங்கும் வகையில் பொன்னனூர் கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொன்னனூர் பகுதி கிராம மக்களின் நேரமும், அலைச்சலும் குறையும்.

எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத்திலேயே பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், துணைப் பதிவாளர் (பொ) அப்துல் சலீம், ஊராட்சிமன்றத் தலைவர் மேகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!