புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25 மற்றும் 26 ல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள்  ஆய்வு: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25 மற்றும் 26 ல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, இயந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரிஎண்ணெய் மற்றும் இதர மானியத் திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் (2022) மீன்பிடி விசைப்படகுகளை வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரியும் மீன்வளத்துறை அலுவலர்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25.05.2022 மற்றும் 26.05.2022 ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப் படகினை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டப் படி, ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். பின்வரும் நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். விசைப்படகுகள் ஆய்வின் போது காண்பிக்கப்படாத படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரிஎண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் இரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமை யாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாமையால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு துறை பொறுப்பேற்காது. நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத பதிவு செய்யப்படாத படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரிஎண்ணெய் பாஸ்புத்தகம் மற்றம் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடவும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் விசைப்படகு உரிமையாளர் கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் விசைப்படகில் ஆய்வுக் குழு ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். படகுகளின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்று ஆகியவைகளின் அசல் ஆவணங்களுடன் அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ஆய்வுக் குழுவினரிடம் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆய்வு பணி காலை 7.00 மணிக்க தொடங்கப்படும். ஆய்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஆய்விற்கு உட்படுத்தப் பட்ட படகுகளின் உரிமையாளர்களுடன் அப்படகின் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் 2 புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தப்படும்

விசைப்படகில் உள்ள கடற்பாதுகாப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு கருவிகள் போன்றவற்றின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் துறை மூலம் முழு மானிய உதவியில் வழங்கப்பட்ட , பகுதி மானிய உதவியில் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகளை ஆய்வுக்கு காண்பிக்கப்படவேண்டும்.படகு கட்டப்பட்டு, பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டுவரும் படகுகளை தீவிரமாக ஆய்வு செய்த அப்படகுகள் கடலில் செலுத்த தகுதி வாய்ந்தவையாக உள்ளனவா என்பதை படகினை இயக்கிப் பார்த்து படகு மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட , பதிவு செய்யப்படாத படகுகளை தவறாமல் மேற்கண்ட நாட்களில் ஆய்வுக்குழுவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 13 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்