/* */

திருமயத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

திருமயத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

HIGHLIGHTS

திருமயத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
X

திருமயத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்

தமிழகத்தில் கடந்த வாரம் அக்னி வெயில் முடிவுக்கு வந்தது. இதனிடையே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய நிலையில் இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பொழியும் என சென்னை வானிலை அறிவித்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் பெய்தது. பலத்த மழையால் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது.

இதனிடையே தொடர்ந்து பெய்த பலத்த மழையால் திருமயம் பகுதியில் கோடை விவசாயம் செய்து உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் கோடை பயிரிட்ட எள்ளு, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சேதமடைந்த விவசாய பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!