/* */

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நாளை (மே 31) தொடக்கம்

2023-2024- ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31.5.2023 புதன்கிழமை தொடங்குகிறது

HIGHLIGHTS

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை  நாளை (மே 31) தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024- ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31.05.2023 புதன்கிழமை அன்று முதல் தொடங்க உள்ளது.

31.05.2023 காலை 10 மணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகன், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், NCC, அந்தமான நிகோபார் (தமிழ் குடிகள்), பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் முதலான சிறப்பு ‘ஒதுக்கீட்டு பிரிவிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதற்கட்ட கலந்தாய்வு 01.06.2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல் (B.Com Commerce) பாடப்பிரிவிற்கும். 03.06.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பி.எஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடப்பிரிவிற்கும், 06.06.2023 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு 12.06.2023 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல் (B.Com Commerce) பாடப் பிரிவிற்கும். 14.06.2023 புதன் கிழமை காலை 10 மணிக்கு பி.எஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடப்பிரிவிற்கும், 16.06.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் பாடப் பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.

மேலும் கொண்டுவரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம், 10th, +1 மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ் (அசல், நகல் 3), +2 மாற்றுச்சான்றிதழ் (அசல், நகல் 3). சாதிச்சான்றிதழ் (அசல், நகல் 3). இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (அனைத்து பக்கங்கள்) நகல் 2. வருமான சான்றிதழ் நகல் 2. ஆதார் கார்டு நகல் 2. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் 2. பாஸ்போர்ட் சைஸ் போட்டா நகல் 4. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் அதற்குரிய மூலச்சான்று அசல் மற்றும் நகல்-2, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ஆகும் என திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ம.சண்முகவள்ளி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 May 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி