/* */

சதுரங்க வீரர்களை உருவாக்கி வரும் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்

நூற்றுக்கணக்கான சதுரங்க வீரர்களை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்

HIGHLIGHTS

சதுரங்க வீரர்களை உருவாக்கி வரும் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்
X

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சதுரங்க வீரர் அங்கப்பன் தனது பயிற்சியால் நூற்றுக்குமே மேற்பட்ட சதுரங்க வீரர் வீராங்கனை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

சதுரங்கத்தில் ஆர்வமுள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளைத் தேடிப்பிடித்து தான் நடத்தி வரும் ஸ்ரீ சாய் சரவணா சதுரங்க அகாடமி வாயிலாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம்பயிற்சி பெற்றவர்களின் எண்ணி்க்கை 100 ஐ தாண்டும்.அதுமட்டுமல்லாமல் ஆன்லைனிலும் சதுரங்க பயிற்சி U.S, UK, UAE சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் , உள்நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் களும் இவரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து சதுரங்கவீரர் அ.அங்கப்பன் கூறியதாவது: எனக்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி என்று சொல்லக்கூடிய தசை திசை நோய் தாக்கியது. எனினும் எனது பெற்றோர் அடைக்கலவன் -அடைக்கம்மை ஆகியோரின் மனம் தளராத ஒத்துழைப்புடன் நன்றாகவே படித்தேன்.பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தேன் . 12ம் வகுப்பில் காமஸ் குரூப்பில் 1200 -க்கு. 1104 மதிப்பெண் எடுத்தேன். தொடர்ந்து கல்லூரியில் பிகாம் படித்தேன்

எனக்கு சிறுவயதிலிருந்தே செஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். எனது சித்தப்பா செஸ் விளையாடுவார். அவரிடம் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன்பிறகு நிறைய செஸ் சம்பந்தமான புத்தகங்கள் வீடியே மூலம் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.பிறகு முறையாக சதுரங்கம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

பின்னர் மாவட்ட அளவிலும் மாநில அளவில் விளையாடி தற்போது சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு சதுரங்கத்தில் பல வெற்றிகளை பெற்றேன். தொடக்க காலத்தில், செஸ் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடத்தினார்கள். அதில்தான் முதன் முதலாக கலந்து கொண்டேன். அதில் 5 சுற்றில் முதல் 2 சுற்றளவில் வெற்றி பெற்றேன். என்னுடைய முயற்சியை கைவிட வில்லை. மீண்டும் மீண்டும் போட்டிகளில் பங்கு கொண்டேன்.பள்ளி அளவில் தொடங்கி மாவட்ட அளவிலான போட்டிகளில் தகுதி பெற்று மாநில அளவில் விளையாடச் சென்றேன்.

அப்போது தான் செஸ் போட்டியின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. அதன்பிறகு திருச்சியில் நிறைய போட்டிகளில் பங்கு கொண்டேன். ரேடிங் தொடர்களில் விளையாடி இருக்கிறேன். அதற்கு பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தொடர்கள் நடத்த ஆரம்பித்தார்கள். அதில் எல்லாப்போட்டிகளிலும் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். தற்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. அதிலும் பங்கு கொள்கிறேன். இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவேன்.

எனது அகாடமியின் மூலம் மாநிலம் மாவட்டஅளவில் போட்டிகளும் தேசிய அளவிலான சதுரங்க போட்டிகளையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தி இருக்கிறேன் 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய அளவிலான போட்டி சமீபத்தில் 2022 -ல் எனது அகாடமி சார்பில் நடத்தி பாராட்டைப் பெற்றுள்ளேன்.2019 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஸ்லோவாகியா என்ற நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கான மாநில அளவிலன போட்டி திருச்சியில் நடைபெற்றது. நான் அதில் வீல் சேர் பிரிவில் 3ம் இடம் பிடித்தேன். ஆதலால் என்னை அதில் தேர்வு செய்தார்கள்.

முதன் முதலாக வெளிநாட்டு போட்டிக்கு தேர்வு ஆனது அப்போதுதான் ஆகவே நான் ஐரோப்பாவிற்கு முதன் முதலாக சென்றேன். அதில் கலந்து கொண்டு விளையாடினேன். முதன் முதலாக இந்த மாதிரி உலக கோப்பையில் விளையாடியது பெருமையாக உள்ளது. அதன்பிறகு கோவிட் காரணத்தினால் 2020 -ஆம் ஆண்டு IPCA சாம்பியன்ஷிப் ஆன்லைனில் நடைபெற்ற போட்டியிலும் பங்குபெற்றேன்.

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை ஆன்லைனில் நடைபெற்றது அந்த போட்டி யில் பங்கு பெறுவதற்கான தேர்ச்சி போட்டியில் இந்திய அளவில் நடைபெற்றது அதில் இரண்டாம் இடம் பிடித்து உலக கோப்பைக்கு தேர்வானேன். உலக கோப்பை யில் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது.நிறைய அனுபவம் கிடைத்தது அதன் பிறகு சமீபத்தில் கடந்தமாதம் ஏசியன் சாம்பியன்ஷிப் ஆன்லைனில் நடைபெற்றது அதிலும் இந்தியா அணியில் இடம் பிடித்தேன். அதன்பிறகு ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி எரெனா கேண்டிடேட் மாஸ்டர் Arena Candidate Master (ACM) என்ற பட்டத்தை வென்றுள்ளேன்.

நான் தற்பொழுது சீனியர் நேஷனல் ஆர்பிட்டர் (அதாவது நடுவர் என்று சொல்லுவார்கள்) பட்டமும் பெற்று மாவட்ட மாநில, தேசிய போட்டிகளில் நடுவராகவும் இருக்கிறேன். அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.சதுரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் விளையாட்டு வீரர் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் விளையாடியதற்கும், மற்றும் மாவட்டத்தின் முதல் சீனியர் நேஷனல் ஆர்பிட்டர் ஆகவும் மற்றும் மாவட்டத்தின் முதல் அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு அங்கீகரித்த பயிற்சியாளராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பெருமையாகவும் உள்ளது

செஸ், யோகா இவையெல்லாம் கொஞ்சம் மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். அதிலும் செஸ்சை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி அதில் மட்டுமே நம்மை சிந்திக்க வைக்கும். எந்தவொரு முடிவை எடுப்பதற்கும் செஸ் உதவியாக இருக்கும்.இளைய தலைமுறை அனைவரும் செஸ்ஸை கற்றுக் கொள்ள வேண்டும். செஸ் அவர்களுக்கு எதிர்காலத்தில் நன்றாகவே இருக்கும். அவர்கள் வாழ்க்கை சிந்திப்பதற்கும் சரி, அவர்களு டைய வாழ்க்கையாகவே செஸ் மாறுவதற்கும் சரி, நல்ல வாய்ப்புகள் இருக்கும். எனக்கு விஸ்வநாத் ஆனந்த் மாதிரி பெரிய அளவில் பெயர் எடுக்க வேண்டும் அதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி அனைவருக்கும் கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

எனக்கு உதவியாக இருந்து என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த எனது பெற்றோர்கள், சதுரங்க பயிற்சியாளர்கள் செந்தில்பிரபு, கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர், மாவட்ட சதுரங்க கழக கழகத்தினர் உறவினர்கள் நண்பர்கள் , என்னை தற்பொழுது வரை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எனினும் எனக்கு நிரந்தர வருமானம் எதுவும் இல்லை. எனக்கு அரசு வேலை கிடைத்தால் வாழ்வாதாரத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறும் சூழலில், தமிழக முதல்வர் எனக்கு ஏதாவது ஒரு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை தனது கோரிக்கை யாகவும் வேண்டுகோளாகவும் வைப்பதாக தெரிவித்தார் அங்கப்பன்.

Updated On: 27 July 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...