/* */

புதுக்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு இளைஞர்கள் உதவி

புதுக்கோட்டையில் ஊரடங்கால் தவித்த ஆதரவற்றோருக்கு இளைஞர்கள் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு இளைஞர்கள் உதவி
X

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உணவில்லாமல் தவித்த முதியோர்களுக்கு உணவுகளை வழங்கிய இளைஞர்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனையொட்டி இன்று இரண்டாவது வார ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் புதுக்கோட்டை நகர பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை கீழராஜவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சாலை ஓரங்களில் ஆதரவற்றோர் இருக்கும் பொது மக்களுக்கு உணவு கிடைப்பதில் மிக சிரமம் அடைந்தனர்.

ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் தவிக்கும் பொது மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நினைத்த இளைஞர்கள், தெற்கு மூன்றாம் வீதிகளில் திமுக நகர கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான நைனா முகமது தன்னுடைய அலுவலகம் முன்பு அமுதசுரபி என்னும் ஒரு திட்டத்தை துவங்கி தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குளிர்சாதனப் பெட்டியில் கொண்டுவந்து வைக்கப்படும் உணவை அனைத்து பொதுமக்களும் எடுத்துச் செல்வார்கள் தற்போது இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நடமாடும் அமுதசுரபியை நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது மகன் தன்வீர் முகமது ஏற்பாட்டில் நடமாடும் அமுதசுரபியை துவங்கி இருசக்கர வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரம் உள்ள பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்று உணவுகளை வழங்கினர்.

ஊரடங்கு காரணமாக உணவு இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு இந்த இளைஞர்கள் செய்த உதவி அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது.

Updated On: 16 Jan 2022 8:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  4. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  5. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  7. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  8. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  9. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!