/* */

புதுக்கோட்டையில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் சீமானின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும்  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டுக் கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குறித்து அவதூறாகப் பேசியும் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு இலங்கை அரசுக்கு துணை போனதாகவும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டவர் ராஜீவ்காந்தி என அவதூறாக பேசினார் இதனை கண்டிக்கும் விதத்தில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டிக்கும் விதத்தில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் செருப்பால் அடித்தும் தமிழக அரசு உடனடியாக சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அகமது ஆசாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சரண், தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மனோஜ், கார்த்திக், மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் துரை திவ்யநாதன், வக்கீல் சந்திரசேகரன், நகர தலைவர் இப்ராஹிம் பாபு, வீர துரைசிங்கம், சூர்யா பழனியப்பன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2022 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?