/* */

டிசம்பர் 5 -ல் தேதி உலக மண் தினம்: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளை விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

டிசம்பர் 5 -ல்  தேதி உலக மண் தினம்: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான் நல்ல பயிர் வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும். விவசாயிகள் பயிர் சாகுபடியில் மகசூலை அதிகரிக்க பல்வேறு வேளாண் தொழில் நுட்பங்களை பயன்படுத்திவருகின்றனர். இதில் குறிப்பாக மண் வளத்தினை சிறப்பாக பேணுவதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும். மேலும் பயிருக்கு தேவையான உரங்களை மண் வளத்திற்கு ஏற்றவாறு உரம் இடுவதனால் மண் உவர் நிலமாக மாறுவதை தடுப்பதோடு, உரச்செலவினை குறைத்து பயிர் மகசூலை அதிகரிக்கலாம். எனவே விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண் வளத்தின் அடிப்படையில் உரமிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று உலக மண் தினம் கடைபிடிக்கப்படுகிது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பெறலாம்.

மண் ஆய்வின் அவசியம்: மண்ணிலுள்ள பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்துக்களின் பயிர்களுக்கு கிடைக்கக் கூடிய அளவை கணக்கிட்டு சமச்சீர் முறையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மேற்கொள்ளலாம். மண் நயம் அறிந்து அதற்கேற்ப வண்டல் அல்லது மணல் இட்டு பயிருக்கேற்ப மண் நயத்தை மேம்படுத்தலாம். நிலத்தின் பிரச்சனைகளான களர் ,உவர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச்சீர்த்திருத்தம் மற்றும் மேலாண்மை தொழில் நுட்பம் பயன்படுத்திடலாம்.

பயிருக்கு உயிரோட்டமான நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம் அளவை அறிந்து அதற்கேற்ப நுண்ணூட்ட உரமிட்டு பயிரின் மகசூலை அதிகரிக்கலாம். எனவே, விவசாயிகள் தங்கள் கிராமங்களில் 05.12.2022 அன்று நடைபெறும் உலக மண் தின விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

மண் வளம் காக்க உறுதி ஏற்போம்...இயற்கை தரும் பெருங்கொடையான மழையை நம்பி மண் இருக்கிறது. மண்ணை நம்பி மரம் இருக்கிறது. மரத்தை நம்பி பறவைகளும் , விலங்குகளும் , மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஏதோ ஒரு விதத்தில் சார்ந்தே இருக்கின்றன. மழைநீர் விண்ணிலிருந்து மண்ணைத் தொடுவதிலிருந்து மனித குலத்தின் மகிழ்ச்சி தொடங்கி விடுகிறது. மண் வளமாக இருந்தால் மனித குலமும் வளமானதாக இருக்கும் . மற்ற உயிரினங்களும் வளமாகவும் , நலமாகவும் இருக்கும். மண் தன் வளத்தை இழந்தால் , மனித இனம் வறுமையை அடையும்.

மண்ணிற்கும் , மனிதனுக்கும் தொப்புள் கொடி உறவு ஆதியிலிருந்தே இருந்து வருகிறது. நாகரிகம் வளர்ச்சி பெறாத காலத்தில் , மண்தான் தன் பிள்ளையான மரத்தின் மூலம் இலை தழைகளை ஆடையாகத் தந்தது . நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்றைய விஞ்ஞான காலம் வரை மனிதனை மண் கரம் பிடித்தே பயணித்து வருகிறது

மனிதன் கூடி வாழத் தொடங்கினான். வேளாண்மை செய்தான். தான் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தை மண்ணிற்கு உரமாக்கினான். செடி , கொடிகளை உரமாக்கினான். இதனால் , நிலத்தில் விளைந்த காய்கனிகள் , உணவு தானியங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் , வளத்தையும் தந்தன. நூறாண்டு நோய்நொடியின்றி வாழ்ந்தான். உண்ணும் உணவே மருந்தாக அமைந்ததால் , மருத்துவ மனைகளின் தேவையும் , சேவையும் அதிகம் தேவைப்படவில்லை.

Updated On: 4 Dec 2022 4:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?