/* */

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 01.08.2022 முதல் 31.03.2023 வரை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி:  அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர் தகவல்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 01.08.2022 முதல் 31.03.2023 வரை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து http://www.nvsp.in என்ற இணையத்திலும் (அல்லது) வாக்காளர் உதவி மையம் (VOTERS HELP LINE – VHP) செயலி முலமாகவும் (அல்லது) GARUDA APP(அல்லது) தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையம் (அல்லது) மக்கள் சேவை மையம் ஆகியவை மூலம் ஆதார் விபரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய படிவமான 6-பி தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் உள்ளது. சுய அங்கீகாரத்துடன் வாக்காளர்கள் NVSP Portal / VHA Apps –ல் உள்ள படிவம் 6-டீ -ஐ நிரப்பி ஆதார் (UIDAI) ல் பதிவு செய்யப்பட்ட அவரது மொபைல் எண்ணை இணைக்கலாம். இருப்பினும் மக்கள் தொகை விவரங்களில் சில வேறுபாடுகள் இருப்பின் விண்ணப்பம் செய்வதில் தோல்வியுற சாத்தியகூறுகள் உள்ளது.

சுய அங்கீகாரம் இல்லாமல்(Without Self Authentication) வாக்காளர் சுய அங்கீகாரம் செய்ய விரும்பவில்லை அல்லது மேற்குறிப்பிட்டவாறு சுய அங்கீகாரம் தோல்வியுற்றதால் வாக்காளர் அங்கீகாரம் இல்லாமல் ஆன்லைனில் தேவையான இணைப்புகளுடன் படிவம 6-பிசமர்ப்பிக்கலாம்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ((BOOTH LEVEL OFFICERS - BLO) வீடு வீடாக விசாரணைக்கு வரும் போது அவர்கள் கொண்டு வரும் படிவம் 6-பி -ஐ வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். பெறப்பட்ட படிவம் 6-டீஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் GARUDA APP மூலம் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் ((ERO) பயன்படுத்தப்படும் ERONET மூலம் 7 நாட்களுக்குள் கணினிமயமாக்கப்படும்.

ஆதார் எண் வழங்குவது முற்றிலும் தன்னார்வமானது. வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பதிவுகளை அங்கீகரிப்பதற்காகவும் எதிர்காலத்தில் சிறந்த தேர்தல் சேவைகளை வழங்குவதற்காகவும் ஆதார் எண்ணை வாக்காளர்களிடமிருந்து பெறுவதன் நோக்கம் ஆகும்.

வாக்காளர்களிடம் ஆதார் எண் இல்லை என்றால் கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும். ஆபுNசுநுபுயு துழடி ஊயசன (மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்ட அடையாளம்). வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம். தொழிலாளர் அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் (நிரந்தர கணக்கு எண் அட்டை). தேசீய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று. இந்தியக் கடவுச்சீட்டு. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் . மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை . பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை . இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையாளல் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை

வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6-பி மற்றும் இணைப்புகளை கணினிமயமாக்கப்பட்ட பிறகு வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களால் மிகுந்த பாதுகாப்பாக பராமரிக்கப்படும். மேலும் பெறப்படும் ஆதார் விபரங்களை முறையாக ஆதார் சட்ட விதிகளின்படி கண்டிப்பாக பாதுகாக்கப்படும். 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு முன் கூட்டியே விண்ணப்பிக்கலாம். அதாவது ஜனவரி 1-ம் தேதி, ஏப்ரல் 1-ம் தேதி, ஜுலை 1-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி அந்தந்த காலாண்டில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்.

இளைஞர்கள் தாங்கள் தகுதிபெறும் 18 வயதை அடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தபின் அந்த நபருக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொ) (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 7 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...