புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது எப்போது?

Railway Gate -திருவப்பூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் எப்போது அமைக்கப்படுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது எப்போது?
X

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறும்  வாகனங்கள்

Railway Gate -புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டையில் முக்கியமான பகுதியாக திருவப்பூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து சற்று தொலைவில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி-காரைக்குடி மார்க்கத்தில் இந்த ரயில்வே இருப்புப்பாதையில் இந்த கேட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேட் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அதாவது புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு சாலையும், திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ஒரு சாலையும், அன்னவாசல் செல்லக்கூடிய சாலையும், பூசத்துறை நோக்கி செல்லக்கூடிய சாலையும், திருவப்பூர் செல்லக்கூடிய சாலையும் சந்திக்கும் பகுதியாகும். நாள் ஒன்றுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் என 18- க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த வழித்தடத்தில் கடந்து செல்கின்றன.

இதுதவிர வாராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்களும் செல்கின்றன. இந்த 5 சாலைகள் சந்திப்பில் உள்ள கேட் ரயில்கள் கடந்து செல்லும் போது மூடப்படும்போது மேற்காண்டும் ஐந்து சாலைகளில் இருந்தும் வரும் நூற்றுக்கணக்காண வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது.

ரயில்வேகேட் திறக்கப்படும் நேரத்தில் 5 சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இருபுறத்தில் இருந்தும் முந்திக்கொண்டு செல்வதால் கார்கள், லாரிகள், பஸ்கள் போன்ற வாகனங்கள் நகருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் வாகனங்கள் 5 சாலைகளில் இருந்து ரெயில்வே கேட்டை கடக்க முற்படுகிற போது கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.

இதனிடையே இந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் காத்திருப்பதுடன் போக்குவரத்து சீரான பின்பே ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், அது சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி. இந்தப்பகுதியில் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி ஓபிஎஸ், எடப்பாடி, ஸ்டாலின், எம்பி திருநாவுக்கரசர் வரை அனைவருமே இங்கு மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றவர்கள்தான்

ஆனால், இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கும் கோரிக்கை நிறைவேறுமா நிறைவேறாதா என்ற எதிர்ப்பார்ப்பு புதுக்கோட்டை மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இதில் ரயில்வே மேம்பாலம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். புதுக்கோட்டை நகருக்குள் நுழைவு மற்றும் வெளியே செல்லக்கூடிய சாலையில் முக்கியமான இடத்தில் இந்த கேட் அமைந்திருப்பதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அவசியமாகிறது. அதற்குத் தேவையான இடமும் உள்ளது .

இது குறித்து திருவப்பூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், நான் பிறந்ததில் இருந்தே இப்பகுதியில் வசித்து வருகிறேன். .இந்த திருவப்பூர் ரயில்வே கேட் புதுக்கோட்டையில் முக்கியமான சாலையில் அமைந்துள்ளது. இதில் கேட் மூடப்படும் போதும், திறக்கப்படும் போது ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் இந்த பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இதற்கு நிரந்தர தீர்வு காண மேம்பாலம் அமைக்கப்படும் என அரசியல் கட்சியினர் அறிவிப்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போதும் கூட அறிவித்துள்ளார்கள். பணிகள் ஆரம்பித்து விடும் என்கின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களின் சிரமத்தை பார்க்கும் போது இங்கு மேம்பாலம் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-10-06T16:02:38+05:30

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 2. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 3. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 4. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 5. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 6. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 7. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 8. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 9. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...
 10. குமாரபாளையம்
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில்...