/* */

சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

ஒருவரை அவர் வாழ் நாளுக்குள் பாராட்டி விடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம்.

HIGHLIGHTS

சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
X

புதுக்கோட்டையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா.

இன்றைய சூழலில் சிறுபான்மையினர் நலனில் நாம் அனைவரும் கருத்தில் கொண்டு அக்கறை செலுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய “ஊறும் வரலாறு” புத்தகத்தின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றிய நந்தலாலா பேசியது.

ஒருவரை அவர் வாழ் நாளுக்குள் பாராட்டி விடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம்.சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தின் இருக்கிறோம். பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத்தோடு துணை நிற்பதை காண்கிறேன். இந்த தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன் எழுதவில்லை என கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழுதத்தான் நந்தலாலா வேண்டும் என்றார்.

விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கபார்க்கான் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார். நிகழ்வை சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.

Updated On: 26 March 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்