/* */

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு

பொதுமக்களுக்கு ஆலயங்களில் பூஜை செய்யப்பட்ட பொங்கல், கொண்டைக்கடலை, இனிப்பு போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு
X

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு தேமுதிக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில், பழனியப்பா அருகிலுள்ள பொற்பனை முனீஸ்வரர் கோயில் மற்றும் விநாயகர் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேமுதிக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சிங்கமுத்து. மாவட்ட அவைத்தலைவர் நெடுவை துரைராஜ், பொருளாளர் கே.ஆர். ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேமுதிக கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாகீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆலயங்களில் பூஜை செய்யப்பட்ட பொங்கல், கொண்டைக்கடலை மற்றும் இனிப்பு போன்ற பிரசாதங்களை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் முத்துக்குமார் பாக்கியம் இளைஞரணி துணைச் செயலாளர் ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Aug 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?