/* */

முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 13 பேருக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரர்களின் குறைகளை போக்கும் வகையில்; 3 மாதத்திற்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 13  பேருக்கு கல்வி உதவித்தொகை
X

முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுவை பெறுகிறார்,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

நமது நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டமுன்னாள் படைவீரர்களின் குறைகளை போக்கும் வகையில்; 3 மாதத்திற்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் படைவீரர்களிடமிருந்து நில ஒப்படைப்பு, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் சென்ற முறை குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் வட்டி மானியத்திட்டம், தொழிற்கடன் மானியம், அரசு போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்றைய தினம் 13 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2.60 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தி.கி.செண்பகவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  2. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  3. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  6. சினிமா
    ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  9. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  10. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...