/* */

சீர்திருத்தப்பள்ளிச் சிறுவர்களை திருத்த பல்வேறு நடவடிக்கை:அமைச்சர் ரகுபதி பேட்டி

சிறைக்குவரும் புதிய கைதிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள்

HIGHLIGHTS

சீர்திருத்தப்பள்ளிச் சிறுவர்களை திருத்த பல்வேறு நடவடிக்கை:அமைச்சர் ரகுபதி பேட்டி
X

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட வார்டுகளை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் உள்ள சிறுவர்களை திருத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தமிழகத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்தந்த அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்காக சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட வார்டுகளை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அதேபோல் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை திருத்துவதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சிலர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் திடீரென தப்பித்துச் சென்றாலும், அவர்களை உடனடியாக பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் சிறையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.புதிதாக குற்றவாளிகளில் சிறைக்குவரும் கைதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோன பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகுதான் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கோட்டாட்சியர் அபிநயா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, தாசில்தார் செந்தில், ஒன்றிய சேர்மன் சின்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 5:14 AM GMT

Related News