/* */

உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது: அமைச்சர் ரகுபதி

உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எல்லைப் பகுதிக்கு வந்தால் அவர்களை அழைத்து வருவது நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

உக்ரைனில் தமிழக மாணவர்கள்  எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது: அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ 2 கோடி மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் திறந்து வைத்தனர்

உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு தெரியாது.அங்கு நடக்கும் நிலவரங்கள் செய்தியின் அடிப்படையில் தான் எங்களுக்கும் தெரியவருகிறது உண்மையான நிலவரம்எங்களுக்கு தெரியாது என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல கோடி மதிப்பில் கதிரியக்கத் துறையில் டிஜிட்டல் ரேடியோகிராபியுடன் கூடிய புளோஸ்கோப்பி உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்குகு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் மேலும் பேசியது:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அதிமுக ஆட்சி காலத்தில் வந்த புகாரின் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட புகார்களின் மீது தற்போது வழக்கு போடப்பட்டுள்ளது.உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு தெரியாது.அங்கு நடக்கும் நிலவரங்கள் செய்தியின் அடிப்படையில் தான் எங்களுக்கும் தெரியவருகிறது உண்மையான நிலவரம் எங்களுக்கு தெரியாது.

உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக எல்லைப் பகுதிக்கு வந்தால் அவர்களை அழைத்து வருவது நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அங்கு வான்வழி தாக்குதல் நடைபெற்று வருவதால் மாணவர்கள் வெளியே வருவதற்கு பயந்து பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர் மாணவர்கள் தரைவழியாக எல்லைப் பகுதிக்கு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

நீட் தேர்வை பொருத்தவரை அனைத்து மாநிலங்களும் தற்பொழுது நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை கொண்டு வரக்கூடாது என்பதற்காக புதிய சட்ட வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனடிப்படையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றார் அமைச்சர் ரகுபதி..


Updated On: 3 March 2022 6:30 AM GMT

Related News