/* */

உதயநிதி பிறந்தநாள்:சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

சிட்டி ரோட்டரி சங்கம், பி வெல் மருத்துவமனை மற்றும் 21ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து நடத்தினர்

HIGHLIGHTS

உதயநிதி பிறந்தநாள்:சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்
X

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், பி வெல் மருத்துவமனை மற்றும் 21ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் மாநில கழக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் நகர்மன்ற உறுப்பினர் மெஹர் பானு நிஜாம் முஹம்மது வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தென்னலூர் பழனியப்பன், பள்ளி தாளாளர் கருணைச்செல்வி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் முகமது அப்துல்லா, நிர்வாகிகள் அசோகன், அரசகுமார், தயாளன், தங்க ராஜா, பொறியாளர்கள் சுப்பிரமணியன், யோகேஸ்வரன் நகர் மன்ற உறுப்பினர் கனகம்மன் பாபு, அரசு பொது நல சிறப்பு மருத்துவர், சர்க்கரை நோய் இருதய நோய் ரத்த அழுத்தம் நிபுணர் டாக்டர் ஆனந்த், பொது மருத்துவர் ஹரிதா முகாம் மருத்துவர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

முகாமில் இலவச மருந்துகள், இஜிசி ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர் . நிறைவாக பி வெல் மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை நிபுணர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் கோகுல் பிரசாத் நன்றி கூறினார்.

முகாம் ஏற்பாடுகளை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன் ராஜா, .நிஜாம்முகமது, பாக்கியராஜ், அறிவழகன் ஆகியோர் செய்தனர்.

Updated On: 3 Dec 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?