புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய மரம் நண்பர்கள்

இது தொடர்பாக காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் பயனில்லை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய மரம் நண்பர்கள்
X

புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய மரம் நண்பர்கள்.

புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரத்திற்கு மரம் நண்பர்கள் அமைப்பு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் மரம் வளர்ப்பதை பற்றி விழிப்புணர்வை தமிழக அரசு தற்போது அதிகளவில் ஏற்படுத்தி வருகிறது.தொடர்ந்து அரசு அலுவலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் அதிக அளவில் நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும் என்பது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மரம் வளர்ப்பதை அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறார். அதேபோல் புதுக்கோட்டையில் உள்ள மரம் நண்பர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் சாலை ஓரங்களில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்..

இதனால் தற்பொழுது கஜா புயலுக்கு அப்பறம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் அதிக அளவில் மரங்கள் செழிப்பாக வளர்ந்து பொதுமக்களுக்கு நிழல் தந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், புதுக்கோட்டை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் நன்றாக வளர்ந்து நிற்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.

இது தொடர்பாக மரம் நண்பர்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நகரப் பகுதிகளில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவது நின்றபாடில்லை. அது தொடர் கதையாகி வருகிறது.

குறிப்பாக இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த பத்து வருடமாக பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட மரம் அடியோடு வெட்டப்பட்டது. இதைக்கண்டித்து இன்று மரம் நண்பர்கள் சார்பில் வெட்டப்பட்ட மரத்திற்கு, மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார் பாணியில், மரம் வளர்ப்பதற்காக பஞ்சகாவியா இயற்கை உரத்தை மரத்தின் மேல் ஊற்றி மரம் நண்பர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்

இதுபோல் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வந்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி, மரம் நண்பர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 4:45 AM GMT

Related News