/* */

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி

இப்பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.10.2021 (புதன்கிழமை) அன்று முதல் தொடங்கப்படவுள்ளது

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் Staff Selection Commission நடத்தும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில், தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Staff Selection கமிஷன் பணியிடங்களுக்கான தேர்வானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்றும், இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசித் தேதி 25.10.2021 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு http://ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.10.2021 (புதன்கிழமை) அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின்போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்

Updated On: 8 Oct 2021 6:04 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!