/* */

புதுக்கோட்டையில் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 577 இடங்களில் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி  முகாம்:  ஆட்சியர் ஆய்வு
X

புதுக்கோட்டை நகாராட்சி டவுன்ஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை  ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிகாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு உத்தரவிற்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் 577 இடங்களில் மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி, ராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப்பள்ளி,புதுக்கோட்டை நகர்மன்றக் கட்டடம் ஆகிய இடங்களில் கோவிட் -19 தடுப்பூசிமுகாம்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி இருப்பு, பொதுமக்கள் வருகை, முகாம்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள அடிப்படை வசதிகள்குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களை கோவிட் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதம் கோவிட் தடுப்பூசி ஆகும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கோவிட் தடுப்பூசி முகாமில், இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் தவறாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

பின்னர்,புதுக்கோட்டை நகராட்சி, காந்தி பூங்காவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை சீரமைத்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Updated On: 26 Sep 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  3. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  4. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  7. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  8. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்