/* */

மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்

வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவ,மாணவிகளுக்கு, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
X

புதுக்கோட்டை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு. உடன் முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, தூயமரியன்னை பள்ளி, அரசு மகளிர்கலைக்கல்லூரி, மாமன்னர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் ஆட்சியர் கவிதா ராமு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆன்லைன் வகுப்புகள் எந்தளவுக்கு உபயோகமாக இருந்தது, கல்வி தொலைக்காட்சி எந்த அளவுக்கு பயனளித்தது , விடுமுறை நாட்களில் எந்தவிதத்தில் பொழுதைக் கழித்தனர், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தார்களா என்பதையும் மாணவிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது:மாவட்டத்தில் 349 அரசு அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன இதில் 90 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர் இதேபோன்று மாவட்டத்தில் 76 அரசு தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.இதில் 30 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.இன்று முதல் பள்ளிகளில் 10 11 12 -ஆகிய வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அரசு என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகிறதோ, அவை முறையாக, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாவட்ட உயர் அதிகாரிகள் கொண்ட குழு மூலம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது 76 கல்லூரிகளிலும் தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த கல்லூரியிலே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு விட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை சரி பார்ப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிவறை வசதிகள் ஆகியவை முறையாக உள்ளதா என்பதையும் ஆய்வு நடத்தப்பட்டு அவைகளும் சரி செய்யப்பட்டுள்ளது நூறு சதவீதம் மாணவ மாணவிகளின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது என்றார் ஆட்சியர் கவிதாராமு..

Updated On: 1 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  6. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  7. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  8. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  10. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...