/* */

புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்

ஒரு நாள் மட்டும் 100 நபர்களுக்கு 650 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஹெட் செட் 100 ரூபாய்க்கு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்
X

புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக கூட்டமாக குவிந்த பொதுமக்களால் பரபரப்பு.

புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக கூட்டமாக குவிந்த பொதுமக்களால் பரபரப்பு.

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செயல்பட்டு வரும் பர்னிச்சர் கடையில் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒரு அதிரடி தள்ளுபடி அறிவித்தனர். அதில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் 100 நபர்களுக்கு 650 ரூபாய் மதிப்புள்ள செல்போனில் பயன்படுத்தப்படும் ஹெட் போன் 100 ரூபாய்க்கு தரப்படும் என கடை நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காலையே ஹெட்போனை வாங்குவதற்கு இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என கடையின் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் அதிக அளவில் கூட்டமாக குவிந்த இளைஞர்களை கட்டுப்படுத்த கடை நிர்வாகம் சார்பில் கதவுகள் அடைக்கப்பட்டு 10 நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் 100 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்பட்டது.

100 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்படுகிறது என கேள்விப்பட்ட பலர் கடைகள் முன்பு அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் அறிந்த காவல்துறையினர் கடையின் முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் 100 நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்களை அனுப்பி விட வேண்டும் என கடைக்காரர்களிடம் எடுத்துக் கூறி பின்னர், அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்களை வாங்குவதற்கு முதியோர்கள் இளைஞர்கள் என பலரும் முண்டியடித்துக் கொண்டு வாங்குவதற்கு முற்பட்டனர்.

Updated On: 10 March 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?