ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா அரங்கம் அமைக்க கால்கோள் விழா
The foot ceremony to set up the centenary hall of Raja Rajagopala Thondaiman
HIGHLIGHTS

ராஜா தொண்டைமான் நூற்றாண்டு விழா அரங்குக்கான கால்கோள் விழாவில் பங்கேற்ற விழாக்குழுவினர்
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழாவை ஜூன் 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை டவுன் ஹாலில் மன்னர் நூற்றாண்டு விழா விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நடைபெறும் அரங்கம் அமைப்பதற்கான கால் கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது. நூற்றாண்டு விழாக்குழு செயலர் ரா. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியில், விழாக்குழு நிர்வாகிகள் மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், ஆர். ரவிச்சந்திரன், கவிஞர் ச. பாரதி, அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் ராம. வயிரவன், ஏ. வீரமணி, ஏ. இப்ராஹிம்பாபு, ஆர். சிவகுமார், பி.எஸ். கருப்பையா, எம். மத்தியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.