/* */

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வளர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி பேச்சு

அறிவுத் திறன், விளையாட்டுத் திறனில் சிறந்து விளங்குவது போல் கலைத்திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வளர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி பேச்சு
X

புதுக்கோடடையில் நடைபெற்ற கலைப்போட்டியில் பங்கேற்ற  மாணவிக்கு அறிவியல் உபகரணங்களை வழங்கிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் எம்எல்ஏ-க்கள் டாக்டர் முத்துராஜா,  சின்னத்துரை.

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (07.12.2022) துவக்கி வைத்தார்.

பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது; அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்; மாவட்டம் தோறும் கலைத் திருவிழா நடத்திட முதலமைச்சர் ஆணையிட்டார். இக்கலைப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் அறிவுத் திறன், விளையாட்டுத் திறனில் சிறந்து விளங்குவது போல் கலைத்திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக் கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கலைத்திருவிழா நடைபெறும் இடமானது வேடிக்கை பார்க்கும் இடம் அல்ல. அது சிறந்த கலைஞர்களை உருவாக்கும் இடம் ஆகும். கலைத்துறையில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கலைத்துறையின் மூலம் கிடைக்கும். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்கள் இன்று கலைத்துறையில் சாதித்து வருகிறார்கள். கலைத்துறையின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை ஈட்ட முடியும். கலைத்துறை வருங்கால வாழ்க்கைக்கு உதவும் என்பதை மாணவ, மாணவிகள் மனதில் பதிய வைக்கவும், திறமைகளை வெளிக் கொணரவும் கலைத்திருவிழா உதவும். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாவில் தங்களது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்எஸ்.ரகுபதி.

அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட வானவில் மன்றம் திட்டத்தின்கீழ், அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல் கணிதம் ஆகியவற்றை 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுக்கும் வகையில், கேள்விக் கேட்கும் திறன் மற்றும் ஆராயும் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்டெம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 27 ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் உபகரணங்களையும் மற்றும் மாவட்டக் கலைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஜெ.ஜெ.கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவர் பி.சின்னையா நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சி.தங்கமணி, மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜெ.சுதந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Dec 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்