/* */

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடக்கம்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடங்கியது.

HIGHLIGHTS

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடக்கம்
X
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை

இந்தாண்டு ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறை படியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது இதற்காக பல்வேறு விதிமுறைகளையும் அறிவித்தது.

அதன்படி இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது

ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா விதிமுறைப்படி 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் இருந்தால் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றபோது அவர்கள் கைகளில் சிக்காமல் அவர்களுக்கு வீர விளையாட்டு காட்டி களத்தில் நின்று மாடுகள் விளையாடியதால் போட்டியில் உற்சாகம் அனல் பறந்தது. சில விளையாட்டு காட்டிய மாடுகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலோடு பிடித்து மாடுபிடி ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.


மேலும் இப்போட்டி அரசு வழிகாட்டுதலின்படி 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 13 Jan 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...