/* */

மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் தவறாக நினைக்கக்கூடாது: அமைச்சர் அறிவுரை

ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் தவறாக நினைக்கக்கூடாது: அமைச்சர் அறிவுரை
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 12 புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்கள் ரகுபதி மற்றும் அய்யநாதன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் மாணவிகளிடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

விழாவில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சமீபத்தில் நடந்த நிகழ்வு போன்று இனிய தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதற்காக தான் கூடுதல் கட்டடங்கள் தரமாக கட்டப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதும் 3030 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கட்டிடத்தின் முக்கியம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மட்டும்தான் மக்களால் உற்று நோக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாக உள்ளது. இதற்காக தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தாலும் கொரோனா தற்போது அதிகரித்து வருவதால் மனதளவில் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அதன் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும். பொதுத்தேர்வு என்பது மிக மிக முக்கியமான தேர்வு. அதனை கவனத்தில் கொண்டு மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் மாணவ மாணவிகளின் கவனம் என்பது படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்றுதான் முதல்வரின் எண்ணம்.

மாணவ மாணவிகள் எந்தெந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று கவனமாக முதல்வர் செயல்பட்டு வருகிறார். படித்து முடித்த பிறகு நீங்கள் எப்படிப்பட்ட வேலையில் சேரவேண்டும் என்று கூட முதல்வர் பல்வேறு வகையில் திட்டமிட்டு வருகிறார். பெற்றோர்கள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வையும் அளிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு முதுகெலும்பு என்று கூறினால் அது மாணவிகள் தான். ஒரு வீட்டில் பையன் படிக்கிறான் என்றால் அது அந்த வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும். பெண்கள் படிக்கிறார்கள் என்றால் அந்த சமுதாயமே நன்றாக இருக்கும். அதேபோன்று ஆசிரியர்களும் மிகச் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.

ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கண்டிக்கிறார்கள் என்று நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. ஆசிரியர்கள்தான் உங்களுடைய இரண்டாவது பெற்றோர். உங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் ஆசிரியர்கள் உங்களை கண்டிக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என அவர் பேசினார்.

Updated On: 17 Jan 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு