Begin typing your search above and press return to search.
அக்னிபாத் திட்ட நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்
Students protest by burning copy of Agnipath project
HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா மாணவர் சங்கத்தினர்
அக்னிபாத் என்ற பெயரில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராணுவத்துறையில் ஒப்பந்தத்தில் ஆள் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதன்கிழமை புதுக்கோட்டையில் திட்ட நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் சந்தோஷ், மாவாட்டக்குழு உறுப்பினர்கள் மகாதீர், மகாலெட்சுமி, கார்த்திக், பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.